மியான்மரில் ராணுவத்தினரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 700 ஆக உயர்ந்துள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 82 நபர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களின் ஆர்ப்பாட்டம் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை அன்றும் நடந்துள்ளது. எனினும் ராணுவ ஆட்சி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மிகக் குறைந்த அளவில் வெளியிட்டு வருகிறது.
அதன்படி ஒரு ராணுவ செய்தி தொடர்பாளர், கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தமாக உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 248 தான் என்று கூறியுள்ளார். மேலும் தற்போது மியான்மர் ராணுவம் மொத்த இணையத்தொடர்பையும் நிறுத்திவருகிறது. இதனால் காவல் துறையினரும், இராணுவ வீரர்களும் செய்யும் அட்டூழியங்கள் மற்றும் உரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளிக்கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாகோ என்ற பகுதியில் போராட்டம் நடந்தபோது மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு பின்பு 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பின்பு, உயிரிழந்தவர்களின் உடல்களை லாரியில் ஏற்றிக்கொண்டு இராணுவத்தின் சிலர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் உயிரிழந்தவர்களின் அருகில் மீட்புப் பணியாளர்களை நெருங்க விடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதி மக்கள் பலர் கலவரத்தைத் தொடர்ந்து அருகில் இருக்கும் கிராமங்களுக்கு தப்பியுள்ளனர். மேலும் பாகோவின் நிலவரங்களை மியான்மரில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுமார் 80 க்கும் அதிகமான நபர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் கலவரத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவிகள் செய்யப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.