திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 81 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 25 பெண்கள் உள்பட 81 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் கொரோனா தொற்றிற்க்காக சிகிச்சை பெற்றவர்களில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று முன்தினம் நிலவரப்படி 477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.