நடிகர் ரஜினியின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலான பகுதி நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
#Annaatthe from the shooting spot.@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/1cb9tSCMgM
— Sun Pictures (@sunpictures) April 12, 2021
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாத்த படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். இந்நிலையில் அண்ணாத்த படபிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த், சிவா இருவரும் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.