Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதன் பரவலை கட்டுப்படுத்த… முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணி தீவிரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம்சர்மா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலராக திண்டுக்கல் மாவட்டத்தில் மங்கத்ராம்சரமா நியமிக்கப்பட்டுள்ளார். தடுப்பூசி போடும் மையத்தை நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் திண்டுக்கல்லுக்கு மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு நகருக்குள் நுழைய பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.

கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்தாலும் 14 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்படுகிறது. திண்டுக்கல்லில் உள்ள வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் கொரோனா விதிமுறையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு சார்பில் தடுப்பூசி போடுவதற்காக 86-க்கும் மேற்பட்ட மையங்கள், 32 கொரோனா தடுப்பூசி போடும் மையம் தனியார் சார்பிலும் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி இந்த மையங்களில் இதுவரை 76 ஆயிரத்து 250 பேருக்கு போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.

Categories

Tech |