Categories
மாநில செய்திகள்

சிறுத்தைகளை தவிர…. யாரும் நின்றுவிட முடியாது…! கூப்பிடாமலே போவேன் …!!

அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எல்லோருக்கும் தேர்தல் களம் தான் அரசியல் .நம்ம அரசியலோடு வேறு யாராலும் போட்டி போட முடியாது என்று நான் அடிக்கடி சொல்வேன். இந்த களத்தில் வேறு யாரும் வந்து நிற்க முடியாது விடுதலைசிறுத்தைகள் தவிர…

நாம் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பேசுவதாக அல்ல… யார் பாதிக்கப்பட்டாலும் விடுதலை சிறுத்தைகள் நிற்போம். பாதிக்கப்பட்டவர்களுக்காக  எப்போதுமே நிற்கக்கூடிய இயக்கம்தான் விடுதலை சிறுத்தை இயக்க கட்சி. அதனால்தான் சிஏஏவை எதிர்த்து இஸ்லாமியர்கள் விட மிகப்பெரிய பேரணியை, மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய இயக்கம் விடுதலை சிறுத்தை கட்சி.

தமிழ்நாட்டில் எங்கேயோ போய் நாங்கள் நிற்கவில்லை. எங்கெல்லாம் CAAவுக்கு எதிரான போராட்டம் இருந்ததோ, அங்கெல்லாம் நின்றவன் திருமாளவன்.சிஏஏ  என்கிற குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெங்களூர் போராட்ட களத்தில் நின்றேன், டெல்லியில் போராட்டக் களத்தில் நின்றேன் .யாரும் என்னை இங்கே வாருங்கள் என்று கூப்பிடவில்லை.

இஸ்லாமியர்களுக்கு பெரும் ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடூரமான சட்டம் இது. விவசாய சட்டம் பாதிப்பு என்றவுடன் யாரும் அழைக்கவில்லை. டெல்லி எல்லையில் இந்திய விவசாயிகள் போராடுகிறார்கள் என்பதை தேடி அந்த இடத்திற்கு போய்விட்டு வந்தவன் திருமாவளவன். அந்த களத்திற்கு போய் விடுதலை சிறுத்தைகள் எங்கள் ஆதரவைத் தெரிவிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். பாதிக்கப்பட்டோர் தரப்பில் நிற்கின்ற இயக்கம் எங்களுடைய இயக்கம் என திருமாவளவன் கூறினார்.

Categories

Tech |