Categories
மாநில செய்திகள்

அதிமுக – பாமகவின் பச்சை படுகொலை…! வெகுண்டெழுத்த திருமாவளவன் …!!

அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்த கொலை என்பது திட்டமிட்ட படுகொலை. இது ஏனோ தானோ என்று ஆத்திரப்பட்ட ஒரு கும்பல் தெரியாமல் செய்துவிட்ட ஒரு கொலை அல்ல. ஒரு வேளை முதல் கொலை கூட… ஆத்திரத்தில் பண்ணிவிட்டான் என்று சொல்லலாம். அப்படி போதையில் இருப்பவன் கூட தெளிந்து ஐயையோ தப்பு செய்து விட்டோமே…. நாம் ஏதோ நினைத்து அடித்தோம் இறந்து விட்டானா… அப்படி என்று அவன் பதறுவான்,பதறி விட்டு ஓடுவான்.

ஆனால் அடுத்து ஓடி வருபவனை  கூட திட்டமிட்டு தூக்கிக் கொண்டு போய் ஒரு இருட்டில் வைத்து கொடூரமாக கொல்கிறார்கள் என்றால், இது எப்படி போதையில் நடந்த திடீர் தாக்குதலாக இருக்க முடியும். அதை 20 பேர் ஒருங்கிணைக்கானே…. இதுவே  குற்றம் சார்ந்த செயல்.திட்டம் போடுவது, அதற்கான பணிகளை திரட்டுதல், அதற்கான ஆட்களை திரட்டுதல், அதற்கான கருவிகளை திரட்டுதல் இது எல்லாம் கொலை செய்ய வேண்டும் என்று குற்ற உணர்வோடு செய்வது, எனவே இது  குற்றச் செயல்.

அவன் கையில் ஷார்ப்பான ஒரு ஆயுதம் இருக்கிறது. இதயத்தை நோக்கி குத்துகிறான். எப்படி குத்தினால் இதயத்தை நோக்கி குத்தும் ? எப்படி குத்தினால் கிட்னியை நோக்கி குத்தும் ? அதை எல்லாம் தெரிந்துகொண்டு குத்துகிறான். கத்தி குத்துப்பட்டு சூர்யா கீழே விழுந்த பிறகு தலையில் பாறாங்கல்லை தூக்கிப் போடுகிறார். வாக்குவாதத்தில் எப்படி கொலை செய்யவேண்டும் என்ற அளவுக்கு ஒரு கும்பலுக்கு வெறி வரும். ஆகவே  அதிமுக, பாமக கும்பல்கள் திட்டமிட்டு நடத்திய ஒரு பச்சைப் படுகொலை இது. அவர்கள் தலித் இளைஞர்கள் தான் என்பதனாலே நிகழ்த்தப்பட்ட  படுகொலை என திருமாவளவன் ஆவேசமாக பேசினார்.

Categories

Tech |