கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே ஆசிரியர் ஒருவர் மாணவியை கடத்தி திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான அநீதிகள் நடந்து கொண்டுதான் வருகின்றது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக மாற்றப்பட்டாலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் வருகின்றது. அதிலும் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகள் பலரை கடத்திக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்வது, ஆசை வார்த்தை கூறி கர்ப்பம் ஆக்குவது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே வருகின்றது.
அதேபோல் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஜிஞ்சம் பட்டியை சேர்ந்த காவியா என்ற 16 வயதுடைய மாணவி அப்பகுதியிலுள்ள பள்ளியில் பயின்று வருகிறார். அதே பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் சரண்ராஜ் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் கடத்தி சென்று இருப்பதாக அந்த மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆள் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரண்ராஜை கைது செய்து அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.