இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் அரசுப்பணிகளில் இருக்கின்றன. குரூப்-1 குரூப்-2 குரூப் 4 என பலவகையான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகின்றது. இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் துறைசார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி என் பி எஸ் சி அறிவித்துள்ளது.
அதன்படி ஜூன் 2021 இல் நடைபெற இருக்கும் துறை தேர்வுகளில் கணினி வழித் தேர்வு அறிமுகம் செய்கின்றது. திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் தேர்வு முறை www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வுகள் ஜூன் 22 முதல் 26 வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.