சேலம் மாவட்டத்தில் பிரபல ரவுடி பெண்களை கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை பகுதியில் அப்சல் என்பவர் வசித்து வருகிறார். பிரபல ரவுடியான இவர் மீது நூற்றுக்கணக்கில் வழக்குகள் உள்ளது. இந்நிலையில் ஒரு வழக்கில் காவல்துறையினர் அப்சலை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அப்சல் பொன்னம்மாபேட்டையிலுள்ள திப்பு நகர் பகுதியில் மது அருந்து விட்டு பெண்களைப் பார்த்து கிண்டல் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ரவுடியை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அப்சல் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதால் காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.