கோவையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக உதவி ஆய்வாளர் முத்துவை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் இரவு 10.20 மணிக்கு ஹோட்டலை மூடச்சொல்லி சாப்பிட வந்தவர்கள் மீது உதவி ஆய்வாளர் முத்து என்பவர் தாக்குதல் நடத்தினார். இதில் பெண்கள் உள்ளிட்ட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது. 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணிவரை கடைகள் இயங்க அனுமதி அளித்துள்ள நிலையில் இவர் இவ்வாறு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் முத்துவை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.