சேலம் மாவட்டத்தில் மேட்டூர் நிறேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பார்வையிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள திப்பம்பட்டி பகுதியில் மேட்டூர் உபரி நீர் திட்டத்திற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரேற்று நிலையத்தை விவசாயிகளின் ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர் பாண்டியன் பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளதாவது, உபரி நீர் திட்டத்திற்காக அணையின் ஒரு கரையை உடைத்தது சட்டத்திற்கு எதிரான செயல் என்றும், இந்த செயல் விவசாயிகளை மிகவும் பாதிப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.