தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தோற்று தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய தொற்றானது தற்போதுவரை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசு தற்போது அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்க உத்தரவிட்டுள்ளது. சுழற்சிமுறையில் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்த மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள நலத்திட்டங்கள் குறித்து சுற்றியுள்ள பகுதிகளில் தெரிவிக்க வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.