வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்குப் புஷ்டி தரும்.
தேவையானவை:
வில்வ இலை – 1 கப் (அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன் தக்காளி – 1 வெங்காயம் – 1 கொத்தமல்லி – சிறிது இஞ்சி, பூண்டு – சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன் கம்பு மாவு – 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்துக் கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
பயன்கள்:
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதன் காரணமாக நீரழிவு நோய் வருகிறது. இந்த நீரழிவு நோயை கட்டுப்படுத வில்வ இலை உதவுகிறது. இந்த இலைகளைக் கொண்டு டீ போட்டு குடித்தால் போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
வில்வ இலையை சாப்பிடுவதால் காய்ச்சல் உடனே குணமாகிவிடும்
இது அனீமியா நோய்க்கு சிறந்த மருந்தாகும்
மஞ்சள் காமாலையை சரியாக்கவல்லது
சீதபேதியை உடனே சரியாக்கிவிடும்
இந்த இலை காலரா வராமல் பாதுகாத்துக்கொள்ளும்