Categories
உலக செய்திகள்

வாகனத்தை நிறுத்திய அதிகாரி துடி துடிக்க சுட்டு கொலை.. பதற வைக்கும் வீடியோ காட்சி வெளியீடு..!!

நியூ மெக்சிகோவில் காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொன்ற போதைப்பொருள் கும்பலின் தலைவனை அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். 

வட அமெரிக்க நாடான நியூ மெக்சிகோவில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று இன்டஸ்டேட்  என்ற சாலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வெள்ளை நிறத்திலான chevrolet வாகனத்தை, காவல்துறை அதிகாரி Darion Jarrott என்பவர் தடுத்து நிறுத்துகிறார்.

அதன்பின்பு காரில் வந்த ஓட்டுனரை கீழே இறங்குமாறு கூறுகிறார். இதனைத்தொடர்ந்து அந்த காரில் வந்த நபர் AR-15 ரக துப்பாக்கியுடன் வாகனத்திலிருந்து இறங்கி திடீரென்று அதிகாரியை சுடுகிறார். இதனால் அதிகாரி தரையில் சுருண்டு விழுந்த போதும் அவரின் அருகில் சென்று மறுபடியும் சுட்டுக்கொன்றுள்ளார்.

அதன்பின்பு அதிகாரியின் தலையிலும் சுட்டு விட்டு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உள்நாட்டு பாதுகாப்பு விசாரணை முகவர் விரைந்துசென்று, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் காவல் துறையினரை சுட்டுக் கொன்ற அந்த நபர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் மற்றும் போதைப்பொருள் கடத்தும் கும்பலுடைய தலைவன் என்றும் சந்தேகிக்கப்படும் நபர் Cueva என்று தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து Cueva இருக்குமிடத்தை காவல்துறையினர் கண்டறிந்து, Lionel palomares,  Sonny Montes ஆகிய 2 அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதனையறிந்த Cueva, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த, போலீசாரும் தாக்குதல் நடத்தியதில் Cueva சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |