Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெளுத்து எடுக்காங்க…! ஏதாச்சும் செய்யுங்க ”நட்டு”…. கோவப்பட்டு கூலான வார்னர்…. சுவாரசிய தகவல் ..!!

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியின்  ரன் ரெட்டை டி நடராஜன் கட்டுக்குள் கொண்டுவந்தார் .

நேற்று சென்னையில் நடைபெற்ற ,ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய கொல்கத்தா அணி சிறப்பாக ஆடியது. அதோடு கொல்கத்தா அணியின் பீல்டிங்கும் சிறப்பாக அமைந்தது. நேற்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து வெற்றியை கைப்பற்றியது. ஆனால் தோல்வியடைந்த ஹைதராபாத் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. எனவே நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் பவுலிங் சரியாக அமையாதது என்று பேசப்பட்டு வருகிறது. பவுலிங் பெயர்போன ஹைதராபாத் அணி நேற்று மோசமான பவுலிங் செய்து சொதப்பினர்.

குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் மற்றும் புவனேஷ் குமார் இருவரும் பவுலிங்கில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இருவருமே  சொதப்பினர். புவனேஷ் குமார் பவுலிங் செய்த எல்லா ஓவர்களும்  பவுண்டரிகளாகவும் ,சிக்சர்களாகவும்  எதிரணியினர் அடித்து விளாசினார். இதனால் கடுப்பான கேப்டன் வார்னர்  ,நடராஜன் மீது நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் நடராஜனும் பவுலிங் செய்த ஓவரில் ,இதேபோன்றே தொடங்கினார். இரண்டாவது ஓவரில் பந்துவீசிய நடராஜனின் பந்துகளை ராகுல் -ராணா  ஜோடி அடித்து விளாசினார். அதன்பின் மூன்றாவது ஓவரில் பந்துவீசிய நடராஜன் ஓரளவு பார்மிற்கு வந்தார். இதில் முக்கியமாக கொல்கத்தா அணியின் ரன்களை  குவித்து வந்த ராகுலை, நடராஜன் அவுட் செய்தார். இதன்பிறகு  பவுலிங் செய்த நடராஜன் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார். இதனால் ஹைதராபாத் அணியின் கேப்டன்   கொஞ்சம் கூலாக காணப்பட்டார்.

Categories

Tech |