சென்னையில் காற்று வர வேண்டும் என்று வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள பீரோவிலிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தையும் திருடி சென்றனர்.
இதை அறியாத நிலையில் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு காலையில் மணிகண்டன் கண் விழித்து பார்த்த போது பீரோ திறந்து இருப்பதை கண்டு உடனே அங்கு சென்று பார்த்து உள்ளார். அந்த பீரோவில் இருந்த15,000 ரூபாய் பணம் மற்றும் 7 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து மணிகண்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.