தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தோற்று தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய தொற்றானது தற்போதுவரை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டு பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 16 ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன. வரும் 23ம் தேதி வரை இத்தேர்வுகள் நடைபெறுகின்றன.