நடிகர் பவன் கல்யாண் தன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இதனை தற்போது தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் நடிகர் பவன் கல்யாண் 2 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் இப்படத்திற்கு தற்போது கிடைக்கும் வெற்றியை அவர் கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்.
ஏனென்றால் பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் பவன் கல்யாண் தற்போது தனிமை படுத்திக் கொண்டுள்ளார். இதனால் அவர் வக்கில் சாப் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார்.