பிரிட்டனில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகள் அழைக்கப்பட்டதால் அத்தியாவசியமற்ற கடைகள் திறந்துள்ளது.
பிரிட்டனில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் இன்று முதல் அத்தியாவசியமற்ற கடைகள் மற்றும் சிகை அலங்கார கடைகள், பப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மிகவும் பொறுப்புடன் இருக்க வேண்டும்.மேலும் கொரோனா வைரஸை அடக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதனால் மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதமாக வெளியில் அமர்ந்து இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவு மற்றும் மதுபானங்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் உயிரியல் பூங்காக்கள், நூலகங்கள், சமூக மையங்கள் அனைத்தும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் திருமணங்களிலும் 30 பேர் இறுதி சடங்கிலும் கலந்து கொள்ளலாம். மேலும் ஏப்ரல் 22ஆம் தேதி மீண்டும் தேர்வுகள் தொடங்கப்படவுள்ளதால் ஓட்டுநர் வகுப்புகளும் ஆரம்பிக்க உள்ளது.