ரஜினி சூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு என்று பிரபல காமெடி நடிகர் சூரி பேட்டியளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி பிரகாஷ் ராஜ் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் சூரி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படத்தினை பற்றி கூறியுள்ளார். அதில், தலைவர் சூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு. அவருடன் நான் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் அவருக்கு வேற லெவல் எனர்ஜி இருக்கிறது என்று கூறியுள்ளார்.