நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் முழுமையாக திறக்கப்பட்டது. ஆனால் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வானது உயர் தொழிநுட்பத் திறன் அறி தேர்வாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இளநிலை படிப்புக்கான தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தவறான பதில் 1 க்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.