திருச்சியை சேர்ந்த மாணவி தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள காமன்வெல்த் ஸ்டேடியத்தில் பல்வேறு வகையான மூன்றாவது தேசிய சீக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அங்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுகிதா என்ற சிறுமி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த சிறுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த சிறுமி கூறும்போது, துப்பாக்கி சுடும் போட்டியில் தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும், இந்தியா முழுவதும் இருந்து அவரது கேட்டகிரியில் 30க்கும் மேற்பட்டவர்கள் அந்த போட்டியில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த போட்டியின் நிபந்தனையாக 60 ரவுண்டுகள் ஒரு நிமிடத்தில் சுட வேண்டும் என்றிருந்த நிலையில், தான் அதை 48 நிமிடத்தில் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறுமி பல்வேறு பிரிவில் தங்கம், வெள்ளி போன்ற பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.