மதுரையிலிருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழகத்தில் தமிழ் மாதமான பங்குனி மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் பொதுமக்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வரும். இந்நிலையில் அனைத்து பகுதிகளிலிருக்கும் கோவில்களிலும் பங்குனி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.
மேலும் பங்குனி மாத திருவிழாவில் அனைத்து கோவில்களிலிருக்கும் மூலவருக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இதனை பக்தர்கள் கண்டு சுவாமியை தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.