Categories
மாநில செய்திகள்

3க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால்…. நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பரவி வருவதால் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு பகுதியில் மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |