குக் வித் கோமாளி பிரபலம் சுனிதாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக்கொண்டு சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடையவுள்ளது. முதல் சீஸனில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோர் இந்த சீசனிலும் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர்.
குறிப்பாக அஸ்வினுக்காக சிவாங்கி மற்றும் சுனிதா இருவரும் போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகள் ரசிக்கும் வகையில் இருக்கும். இந்நிலையில் சுனிதாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சுனிதா பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனால் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.