Categories
மாநில செய்திகள்

மக்களே! அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே…. வெளியே போங்க – தமிழக அரசு..!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து அமைச்சர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். தகுதியானவர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |