பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் ரியோ, கேபி, சோம், நிஷா உள்ளிட்டோருடன் குழுவாக செயல்பட்டு வந்தார். இதனால் இவர் இறுதிப்போட்டியின் சில வாரங்களுக்கு முன்னரே மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார்.
இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் தொலைக்காட்சியில் சில சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமீபத்தில் அர்ச்சனாவின் தங்கை சீமந்தத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அர்ச்சனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.