மதுரையில் 1/2 கிலோ கஞ்சா வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது உள்ள காலகட்டத்தில் மது, கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருட்களின் விற்பனை அதிகமாக பெருகி விட்டது. இதனை எடுத்துக் கொண்டு சில நபர்கள் என்ன செய்கிறோம் என்று கூட அறியாமல் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்ததில் அவர் 1/2 கிலோ அளவுடைய கஞ்சாவை வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.