Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: வரும் 14 ஆம் தேதி…. அனைத்து கவர்னர்களுடன் மோடி ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |