Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே! கோவக்காயை இப்படி செஞ்சி சாப்பிடுங்க…. நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!!

கிராமப்புறங்களில் கோவக்காய் அதிகமாக மரங்களிலும், வேலிகளிலும் படர்ந்து காணப்படும். இதனுடைய இலைகள் பொரியல் செய்யப்படுகிறது. இது உடல் சூட்டை தணிக்க பயன்படுகிறது. கோவைக்காயில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகின்றது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சோர்வு நீங்கி நீண்ட நேரம் செயலாற்றும் திறன் கிடைக்கும்.

கோவக்காய் பெருங்குடல், ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும்  வெளியேற்றுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்றுவர கோவக்காயில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகமாக உதவுகிறது. கோவக்காயை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, கொழுப்பு சத்தை குறைக்கும் ஒரு பொரியல் தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

கோவக்காய்.

நல்லெண்ணெய்.

உப்பு.

மிளகு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் இட்டு அதில், நறுக்கி வைத்த கோவக்காயை போட்டு லேசாக வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகு சேர்த்து இறக்கவும். இதை சர்க்கரை நோயாளிகள் காலை நேரத்தில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடலில் தேவையில்லாத கொழுப்பு சத்து கரையும். உடல் பருமன் குறையும். வயிற்றில் உள்ள வாயுவை வெளியேற்றும்.

Categories

Tech |