டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 138 வது நாளாக நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. வேளாண் சட்டங்களின் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 139 நாளாக நடைபெற்று வருகிறது.