Categories
மாநில செய்திகள்

புதிய தலைமை தேர்தல் ஆணையர்…. சுஷில் சந்திரா நியமனம்…!!!

புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்ற உள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா நாளை பதவி ஏற்க உள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பணி ஓய்வு பெற்றதை அடுத்து சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இவர் வரும் மே 2022 வரை பதவியில் இருப்பார். மேலும் இவருடைய பதவிக்காலத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும். இவர் முன்னதாக மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |