நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரபடுத்தினாலும் தொற்று குறைய 14 நாட்கள் வரை ஆகும் என்று பிரதீப் கவுட் ட்விட் செய்துள்ளார். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து மற்றவற்றிற்கு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அறிகுறி இருந்தால் உடனே சோதனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.