Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இலவசமாக மீன் கேட்டு அடிதடி…! குமரியில் பரபரப்பு சம்பவம் …!!

பேச்சிப்பாறை அணை பகுதியில் இலவசமாக மீன் கொடுக்க மறுத்த பொதுப்பணித்துறை மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது ரவுடி கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் மீன் வளத் துறை சார்பில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகிறது.அணையில் உள்ள வளர்ப்பு மீனை பிடிக்க 9பரிசல் மற்றும் 18 பேர் மீன்வளத் துறை அனுமதித்துள்ளது. இவர்கள் பிடிக்கும் மீன்கள் மீன்வளத்துறையால் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பேச்சிப்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ் உறவினருடன் சென்று பொதுப்பணித்துறை சார்பில் பிடிக்கப்பட்ட மீன்களை அள்ளிச் சென்றுள்ளார். இதனை தட்டிக்கேட்ட மீன்பிடித் தொழிலாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மீன்வளத்துறை சார்பில் பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இரு தரப்பினர் இடையே சமாதானம் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரவுடிகளுடன் பேச்சிப்பாறை அணை பகுதிக்கு சென்ற அல்போன்ஸ் அங்கிருந்த மீன்பிடி தொழிலாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

அரிவாள், கத்தி, கம்பு  உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |