மும்பை வான்கடே மைதானத்தில்,4ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .
14வது ஐ.பி.எல் தொடரின் 4ஆவது லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் . 9 பந்துகளில் 14 ரன்களை எடுத்து மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் .பின் களமிறங்கிய கிரிஸ் கெய்ல் -கேல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து, அதிரடியாக விளையாடினர். அதிரடி ஆட்டத்தை காட்டிய கிரிஸ் கெய்ல் 28 பந்துகளில் 40 ரன்களை எடுத்து, கிரிஸ் கெய்ல் அவுட் ஆனார் .
அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேஎல் ராகுல் தீபக் ஹூடா ஜோடி இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 30 பந்துகளில் கே எல் ராகுல் அரை சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து 20 பந்துகளில் தீபக் ஹூடா 1 பவுண்டரி மற்றும் 6சிக்ஸர்களை அடித்து விளாசி அரைசதமடித்தார் . இருவரின் ஜோடி 17.3 ஓவர்களிலேயே 194 ரன்கள் எடுத்து குவித்தது. தீபக் ஹூடா 64 ரன்களை ஆட்டமிழக்க, 3-வது விக்கெட்ட்டிற்குள் , இருவரும் இணைந்து 105 ரன்களை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பூரன் முதல் பந்திலேயே அவுட்டானார். ஆட்டமிழக்காமல் விளையாடி வந்த கேஎல் ராகுல் ,கடைசி ஓவரில் வெளியேறினார். அவர் 50 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து 91 ரன்களை குவித்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கியுள்ள ராஜஸ்தான் அணி 222 வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.