Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒரு சின்ன பிரச்சனை தான்… தாய்-மகனை சரமாரியாக தாக்கிய சிறுவன்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தாய்-மகன் உள்பட 4 பேரை தாக்கிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் உள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வெள்ளாளர் தெருவில் நிறுத்தி விட்டு வாகனத்தில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அருண்குமாரின் மோட்டார் சைக்கிளின் மீது அதே ஊரை சேர்ந்த 18 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை கொண்டு லேசாக மோதியுள்ளான். இதனால் இரண்டு பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேருக்கும் சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் அருண்குமார் அமர்ந்திருந்தபோது அந்த சிறுவன், நண்பர்கள் அருண், சரண், அவனது சகோதரர் கவியரசன் ஆகிய மூன்று பேருடனும் வந்து அருண்குமாரை தாக்கியுள்ளனர். அதனை தடுத்த அருண்குமார் உறவினர்கள் சுரேஷ்குமார், சதீஷ், அருண் குமாரின் தாய் உமாராணி. ஆகிய 3 பேரும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அந்த சிறுவன் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |