Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

போலீஸிடமே இப்படியா..? பொறிவைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை… கைது செய்த காவல்துறை..!!

பெரம்பலூரில் போலீஸ் ஏட்டிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுத்தெருவில் அப்லோசன் என்கிற அப்போ வசித்து வருகிறார். இவர் வருவாய் உதவியாளராக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் வெங்கடேஷ் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த சென்றார். அப்போது ரூ.15,000 கொடுத்தால் இதற்கான வரியை குறைவாக மதிப்பீடு செய்து வழங்குவதாக அப்லோசன் லஞ்சம் கேட்டுள்ளார். வெங்கடேசன் லஞ்சம் கொடுப்பதை விரும்பவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து அப்லோசனிடம் ரூ.15,000 ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுக்க அறிவுறுத்தினர்.

அதன்படி அவரும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி மற்றும் காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கடேசன் லஞ்ச பணத்தை நகராட்சி வருவாய் உதவியாளர் அப்லோசனிடம் கொடுத்தார். அதனை மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ. 15 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அப்லோசனுடைய வீட்டிலும் சோதனை ஏற்றதாக தெரிகிறது.

Categories

Tech |