நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வை ஒத்தி வைக்குமாறு பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில்கொரோனா அதிகரிப்பின் காரணமாக 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.