பெரம்பலூரில் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதனகோபாலபுரத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும் இருந்தார். கடந்த மார்ச் மாதம் கலைச்செல்வி உடல்நலம் சரியில்லாமல் இறந்தார். இதனால் விக்னேஷ் தாய் இறந்த துக்கம் தாங்காமல் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல் துறையினர் விக்னேஷின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.