Categories
சினிமா தமிழ் சினிமா

விளையாட்டிலும் “தெறிக்கவிட்ட தல” … தேசிய அளவில் தகுதி ..!!

கோவையில் நடைபெற்ற   துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித் குமார் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தல அஜித்குமார்  கலந்துகொண்டு இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றிலும் அவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மற்றும் 25 மீட்டர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் பங்கேற்றார். இந்தப் போட்டி  பிரிவுகளில் அஜித்குமார் தனது திறமையை காட்டி வெற்றி பெற்றதால் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றார்.

 

பின்னர்,  , தல அஜித்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் , வரும் டிசம்பர் மாதம் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அவர் பங்கு பெற உள்ளார். அதிலும் வெற்றி பெற்று  சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் பங்கு பெறுவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |