சென்னையில் இன்று மற்றும் நாளை மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தெலுங்கு பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி பொது விடுமுறை நாளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை தமிழ் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி ஆகியவையும் கொண்டாடப்பட உள்ளதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மற்றும் நாளை கட்டணத்தில் 50% தள்ளுபடி என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் 50 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.