Categories
லைப் ஸ்டைல்

வெள்ளைப்பூண்டு 1 மாதம் கெடாமல் இருக்க…. முதல்ல இதை செய்யுங்க…!!!

ஆப்பம் செய்யும் போது வட்டமாக வராவிட்டாலோ அல்லது கடினமாக இருந்தாலோ மாவின் அளவிற்கு ஏற்ப சூடான பால் விட்டு கலந்து பின் செய்தால் ஆப்பம் வட்டமாக மெத்தென வரும்.

அரிசி தானிய வகைகளை நீரில் கழுவினால் அதில் உள்ள தாதுக்கள் விட்டமின்கள் நீரில் கரைந்து விடும்.

எலுமிச்சை ஆரஞ்சுத் தோல்களை அலமாரியில் வைத்தால் பூச்சி தொல்லைகள் இருக்காது. மசாலா பொருட்களை சிறிய பூச்சிகள் நெருங்காது.

வெள்ளைப்பூண்டு பல மாதம் கெடாமல் இருக்க நடுவில் உள்ள குச்சியை உடைத்து ஒவ்வொரு பல்லாக உதிர்க்க வேண்டும்.

பல்லி தொல்லை இல்லாமல் இருக்க பூண்டை சாறாக்கி சுவரில் தெளித்தால் பல்லி ஓடிவிடும்.

Categories

Tech |