ஹட்டன் நகரில் பெரிய வீதியில் பேருந்து மோதி ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஹட்டனில் நேற்று மதியம் 2.00 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றில் மோதி இளைஞர் ஒருவர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை ஹட்டன் நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞரின் உடல் டிக்கோயா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை கைது செய்துள்ளனர். எனினும் உயிரிழந்த இளைஞர் குறித்த எந்த தகவலும் தற்போதுவரை தெரியவில்லை. இந்நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.