புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற மான் மீது வாகனம் மோதியதில் மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வனப்பகுதி உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியிலுள்ள குட்டைகளில் நீர் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் இறை தேடி ஊருக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் ஏனாதி பெரியகுளம் வனப்பகுதியிலுள்ள புள்ளிமான் ஒன்று இறையை தேடி செலும் போதும் சாலையை கடக்க முயன்றுள்ளது.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று மான் மீது எதிர்பாரத விதமாக மோதி விட்டு வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது விட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானை பரிசோதனை செய்து புதைத்துள்ளனர். இதுக்குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.