Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது… ஒரே நாளில் உச்சகட்டம்… சிவகங்கையில் கோர தாண்டவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 60 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, தேவகோட்டை, கோட்டையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 145 பேரில் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |