Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு…. தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

பாரிஸ் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ் Michel Ange பகுதியில் உள்ள Michel Ange மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.  இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் ஒரு ஆண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் மோட்டார்  சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.

https://twitter.com/i/status/1381583141744283648

இதனைத் தொடர்ந்து காயமடைந்த பெண் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்றும் உயிரிழந்த ஆண் யார் என்று தெரியவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்  யார் என்றும் எதற்காக நடந்தது என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |