புதுக்கோட்டை மாவட்டத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மீமிசல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பேசம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பதும் புதுவயல் பகுதியிலுள்ள கோழிப்பண்ணைக்கு கோழிக்கு தீவணத்திற்காக அரிசி மூட்டைகள் கடத்திச் செல்வதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் அவரிடம் இருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் பொருட்களை கடத்தியதற்காக ஆட்டோ டிரைவர் செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுக்குறித்து கோட்டைப்பட்டினம், மணமேல்குடி பகுதிகளில் ரேஷன் பொருட்களை கடத்துவது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.