நாடு முழுவதும் ஏப்ரல் 18-ஆம் தேதி RTGS சேவை 14 மணி நேரம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆன்லைன் பண பரிவர்த்தனையில் RTGS சேவை 14 மணி நேரம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் NEFT சேவைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.