விஜய் தேவரகொண்டா டியர் காம்ரேட் இந்தி ரீமேக்குக்கு 40 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க விருப்பம் இல்லை என்றார்.
தெலுங்கில் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழிலும் நோட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் வெளியான “டியர் காம்ரேட்” என்ற படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஸ்மிக, ஸ்ருதி ராமச்சந்திரன், சாருஹாசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.
மேலும் , கரண் ஜோகர் இந்தியில் ரீ-மேக் செய்ய விரும்பினார். மேலும் இந்தியிலும் விஜய் தேவரகொண்டவையே ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணினார். இதற்காக அவரை சந்தித்து பேசியபோது ரூபாய் 40 கோடி சம்பளம் தருவதாக கூறினார். ஆனால் இதனை அவர் ஏற்க மறுத்து விட்டார். அவர் மீண்டும் மீண்டும் ஒரே கதாபாத்திரத்தில் ஆறுமாதம் செலவழித்து நடிக்க விரும்பவில்லை என பதிலளித்தார். ஆகையால் இந்த படத்தில் இஷான்கட்டாரும், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்க உள்ளதாக செய்தி கசிந்துள்ளது.