ஜெர்மனியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்று மில்லியனை தாண்டியுள்ளது என ராபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,011,513 ஆக அதிகரித்துள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை 78,452 உயர்ந்துள்ளது எனவும் ராபர்ட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் 10 ஆயிரம் பேருக்கு 136.4 என்ற வீதத்தில் பாதிப்பு எண்ணிக்கை உள்ளதால் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பெரும் அழுத்தத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் தொற்று அதிகரித்து வருவதால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.